திஎல்ல ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
16 மற்றும் 17 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்று பகல் 01.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நான்கு மாணவர்கள் பின்னேர வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு வெயாங்கொட, திஎல்ல ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர்.
இதில் ஒரு மாணவன் நீரில் முழ்கியதையடுத்து அவரை காப்பாற்ற முயற்சித்த மற்றைய மாணவனும் நீரில் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது.