காலியில் இடம்பெற்ற கருத்தரங்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரே நாடு என்பதற்காக தமிழ் மக்களிடம் இதுவரை இணக்கப்பாடு இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
தமிழ் மக்களை ஒரு வழிக்கு கொண்டு வருவது புதிய அரசியலமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு மற்றும் 20வது சீர்திருத்தம் சம்பந்தமாக காலியில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சிறுபான்மை மக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்காமையின் காரணமாக யுத்தம் ஒன்று ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டுக்கு சமஷ்டி முறை தேவையில்லை என்றும் தற்போது இருக்கின்ற மாகாண சபை முறையில் சிறு மாற்றம் செய்யப்படுமானால் அதனை ஏற்றுக் கொள்வதற்கு தமது மக்கள் தயார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.