ஜனாதிபதி பதவியை சீர்த்திருத்துவதற்கான 20 வது அரசியலமைப்பு சீர்த்திருத்த சட்டமூலம் மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த கட்சியின் பிரச்சார செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் பிரேரணையை முன்வைத்த நிலையில் , அக் கட்சித்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவால் நிறைவேற்றப்பட்டது.
20வது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் கடந்த ஜூலை மாதம் 09ம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது. இது மக்கள் விடுதலை முன்னணியினால் கடந்த மே மாதம் 25ம் திகதி சபாநாயகருக்கு மற்றும் நாடாளுமன்ற பொதுச்செயலாளருக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான விவாதம் இன்று.