சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் கூடிய போது, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு இடையிலான பிரச்சினை சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இரு தரப்பினரிடையேயும் காணப்படுகின்ற பிரச்சினைகளை 14 நாட்களுக்குள் முழுமையாக தீர்த்துக் கொண்டு அறிவிக்குமாறு அரசியலமைப்பு பேரவை பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளது.
இதன்போது இரு தரப்பினரிடையேயும் உள்ள பிரச்சினை சம்பந்தமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், 14 நாட்களுக்குள் பிரச்சினையை முழுமையாக தீர்த்துக்கொண்டு பேரவைக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட 10 கட்டளைகளை பொலிஸ் மா அதிபர் நடைமுறைப்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.