செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஆஸ்திரேலிய – அமெரிக்கா ஒப்பந்தத்தின் கீழ் அகதிகளை மீள்குடியேற்ற அமெரிக்கா தடை

ஆஸ்திரேலிய – அமெரிக்கா ஒப்பந்தத்தின் கீழ் அகதிகளை மீள்குடியேற்ற அமெரிக்கா தடை

1 minutes read

கடந்த 2016ல் ஆஸ்திரேலியா – அமெரிக்கா இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்காக மனுஸ் தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகள், விண்ணப்பித்து வருகின்றனர்.

சமீபத்தில், இப்படி விண்ணப்பித்த 72 சதவீதமான அகதிளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

தற்போது விண்ணப்பினத்த 32 அகதிகளில் 9 பேரின் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த 9 பேரில் 4 ரோஹிங்கியா, 3 ஆப்கானியர், 2 பாகிஸ்தானியர் மற்றும் 1 ஈழத்தமிழர் எனக்கூறப்பட்டுள்ளது.

இதுவரை நவுரு முகாமிலிருந்து 300 அகதிகளும், மனுஸ் தீவிலிருந்து 167 அகதிகளும் என 467 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக Refugee Action Coalition என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அதே சமயம், 1200 க்கு மேற்பட்ட அகதிகள் மீள்குடியேறுவதற்கான எந்த வாய்ப்புகளுமின்றி இன்னும் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் வாழ வேண்டிய நிலை தொடர்ந்து வருகின்றது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்தவும், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகை செய்தது. இது ஒரே முறை நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More