கடந்த 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ அவர்களை நியமித்தார். அந்த விடயம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என்று கூறி ஐ.தே.கட்சி தலைமையிலான ஐ.தே.முன்னணி தெரிவிக்கின்றது.
அதற்குப் பின்னர் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்திலே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அந்த பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்தது.
பின்னர் நேற்றைய தினம் பாராளுமன்றம் கூடி இன்றும் பாராளுமன்றம் இடம்பெற்று பெறும் அமளிதுமளிக்கு மத்தியில், நாளை பிற்பகல் வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், இவ்வாறு இடம்பெற்ற செயற்பாடுகள் அரசியல் அமைப்பிற்கு முரணானது என ஐ.தே.கட்சியின் தலைமையில் ஐ.தி.முன்னணி தெரிவிக்கின்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திலே எதிர்ப்புப் பேரணி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.