தற்போது பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் சபைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகாமையில் சூழ்ந்திருந்த ஆளும்கட்சியினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவருக்கு எதிராக புத்தகங்களையும், கதிரைகளையும் வீசியெறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், சபாநாயகரால் உள்ளே வரமுடியாத நிலையில், மீண்டும் சபாநாயகர் வெளியே செல்லவேண்டிய இக்கட்டான நிலை உருவாகியுள்ளதோடு, செங்கோலும் வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகள் தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வெளிநாட்டு தூதுவர்கள், வெளிநாட்டவர்கள் இருக்கையில் அமர்ந்தவாறு இதனைக் கண்காணித்த வண்ணம் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பாராளுமன்றத்தில் ஜனநாயக மரபுகளைப் பின்வற்றுமாறு ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் எவ்வித காரணங்களாலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட மாட்டாது என தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.