பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு முன்னர் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமா? என ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியமைக்கு…
இல்லை, பிரதமர் ஒருவர் இல்லாமல் பாராளுமன்றம் கூட முடியும். அதன்படி கடந்த 14,15,16 ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வு கூடியது. இதன்படி திங்கட்கிழமையும் அமர்வு கூடலாம்.
எனினும், எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி பிரதமர் ஒருவரையும் புதிய அமைச்சரவையையும் நியமிப்பார் என நான் எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு ஜனாதிபதி செயற்படவில்லை எனில், அது நாட்டு மக்களுக்கு இழைக்கும் அசாதாரணமாகும்.
அத்துடன், ஜனாதிபதியுடன் நாம் கைகோர்ப்பமானால், எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலை உத்தியோகபூர்வமாக நடாத்த முடியும்.
ஆகவே ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்ல நாம் தயாராகவுள்ளோம். என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா பதிலளித்துள்ளார்.