முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 2018 இல் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3000 வரை குறைந்திருப்பதாக புலம்பெயர்தல் மாகாண செயலகம் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் சுமார் 15255 பேர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக மாகாண செயலரான Mario Gattiker தெரிவித்துள்ளார். இது 2017 ஐ ஒப்பிடும்போது 15 சதவிகிதம் குறைவாகும். 2017ல் 18088 பேர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்தனர். அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 33 சதவிகிதம் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் குறைவு காணப்பட்டது.
இதற்கு காரணம் அதிக தனிமைப்படுத்தப்படுத்தலும் பயமும் என சுவிஸ் அகதிகள் கவுன்சில் என்னும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் Mario Gattiker விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவதற்கு, விண்ணப்பங்கள் குறித்து விரைவாக முடிவெடுக்கும் சுவிட்சர்லாந்தின் கொள்கையும் ஒரு முக்கிய காரணம், அதாவது இதன் பொருள் என்னவென்றால், அதிக அகதிகள் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். முன்பு மத்தியதரைக்கடல் வழியாக இத்தாலியில் புகலிடம் கோரி வந்தவர்கள் இப்போது மொராக்கோ வழியாக இல்லாமல் ஸ்பெயின் வழியாக வருவதும் முக்கியகாரணமாகும் என்கிறார் அவர்.
இவற்றை மறுத்துள்ள சுவிஸ் கவுன்சில், ஐரோப்பாவில் அகதிகள் குறித்த கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம், மனித உரிமைகள் காலுக்குக் கீழ் மிதிக்கப்படுவதற்கும், வன்முறைக்கும், துன்பத்திற்கும் மரணத்திற்கும் வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கிறது.
ஆனால் இது நிரந்தரம் அல்ல என்று தெரிவித்துள்ள Mario Gattiker, 2019 இல் இந்நிலை மாறலாம், புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.