இந்தியாவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவர் விராட் கோலியை தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த தமிழகத்தை பூர்விகமாக கொண்ட முத்துசாமி என்பவர் ஆட்டமிக்கச் செய்துள்ளார்.
அதன்படி 20 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய வந்த விராட் கோலி முத்துசாமியின் சுழலில் சிக்கி அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
சீனுரான் முத்துசாமி தென்னாபிரிக்காவின் டேர்பன் நக ரில் 1994 ஆம் ஆண்டு பிறந்தார். இடதுகை வீரரான இவர், தென்னாபிரிக்க அணியின் முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறை ஆட்டக்காரராக இவர் திகழ்கிறார்.
சீனுரான் முத்துசாமி, சர்வதேச போட்டிகளில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.