நுவரெலியா நகர எல்லையில் சில இடங்களில் இன்று பூப் பனி பெய்துள்ளது. நுவரெலியா குதிரை பந்தயத் திடலைச் சூழவுள்ள பகுதிகள் மற்றும் காய்கறி பயிரிடப்பட்டுள்ள இடங்களில் இந்தப் பூப்பனி பெய்துள்ளது.
நுவரெலியாவில் பெய்யும் இந்த பூப் பனியை காண பிரதேசத்திற்கு பல உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நுவரெலியா மாவட்டத்தில் தற்போது கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.