அமெரிக்காவில் உள்ள சிறைச்சாலைகளில், கொரோனா தொற்று சமூக தொற்றாக மாறி வருவதாக, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள சிறைச்சாலைகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலை வளாகங்களில் நிலவும் கூட்டநெரிசல் மற்றும் சுகாதாரமற்ற சூழலால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஒரு சில சிறைச்சாலைகளில், கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க மாகாண அரசுகள் முடிவு செய்துள்ளன.