தேவையான பொருட்கள்
மேல் மாவு செய்ய:
மைதா – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்,
பூரணத்திற்கு தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1 கப் (வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்),
பச்சை பட்டாணி வேக வைத்தது – 1/2 கப்,
வெங்காயம் – 1/2 கப்,
பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி – 1/2 டேபிள் ஸ்பூன்,
சோயா சாஸ் – 1/2 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பச்சை மிளகாய் – 1,
மிளகுத்தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
மாவு செய்யக் கொடுத்துள்ள பொருட்கள் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஈரத்துணி கொண்டு போர்த்தி 30 நிமிடம் வைக்கவும். ஒரு தவாவில் ஆயில் ஊற்றி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின் அதில் வேக வைத்த சிக்கன் மற்றும் பச்சை பட்டாணியை உப்பு (தேவையெனில்), சோயா சாஸ் ஆகியவற்றை சேர்த்து இறக்கி ஆற வைக்கவும். மேலே செய்த மாவை எடுத்து சின்னச் சின்ன வட்டங்களாக தேய்த்து நடுவில் செய்து வைத்த மசாலா கலவையை வைத்து கொழுக்கட்டை போல் செய்து இட்லி பானையில் 15-20 நிமிடம் வேக வைத்து எடுத்து சில்லி சாஸ் உடன் பரிமாறவும். சிக்கனை தவிர்த்து கேரட், முட்டைகோஸ், பட்டாணி சேர்த்து வெஜிடபுள் மோமோஸ் செய்து கொள்ளலாம்.