கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் கற்பகா திட்டத்தின் 21வது நிகழ்வு இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அக்கல்லூரியின் 93 ஆண்டு நிறைவை நினைவூட்டும் முகமாக முன் நிகழ்வில் 93 மரங்களை பாடசாலை சூழலில் நாட்டப்பட்டதோடு மாணவர்களுக்கு 1001 பயன் தரும் பழமரக்கன்றுகளையும் வழங்கி மரநடுகையின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு தெரியப்படுத்தினர்.
சிதம்பரப்பிள்ளை இரட்ணம் மற்றும் பிரான்சிஸ் ரவிந்திரன் பசில் ஆகியோரின் நினைவாக இந்த மரம் நடும் பணி நிகழ்வு நடைபெற்றது. குடும்பத்தினரின் பங்களிப்புடன் கிளி மத்திய கல்லூரியின் அதிபர் திரு ச பூலோகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிளி மத்திய கல்லூரியின் துணை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என் பலர் கலந்துகொண்டு சிறப்பளித்தனர்.
இன்நிகழ்விற்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் இராகுலன், கிளிநொச்சி பொது வைத்தியசாலை வைத்தியர் சிறிதர், வைத்தியர் குகராசா, வைத்தியர் திரு. திருமதி. மனோகரன், வைத்தியர் ஜெயராஜா, யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் சண்முகராசா, முல்லைத்தீவு வைத்தியசாலை வைத்தியர் சுதர்சன், கிளிநொச்சி கோட்டக்கல்வி அதிகாரி, கிளி மக்கள் அமைப்பின் ஆலோசகர் அதிபர் விக்கினராசா, கிளிபீப்பிள் அமைப்பின் கள உத்தியோகத்தர் சந்திரமோகன், வட்டக்கட்சி ஆரம்ப பாடசாலை அதிபர் பங்கயற்செல்வன், கிளி நகர றோட்டரிக் கழக தலைவர் பியசீலன், அசிரியர்கள், கிளி சமூக அபிவிருத்தி பேரவை உறுப்பினர்கள், பாடசாலை சமூகம், பழைய மாணவர் சமூகம் அகியோரும் வருகை தந்து மரங்களை நாட்டி சிறப்பித்தனர்.
இன்றைய நிகழ்விற்கான முதல் மரங்களை அமரர் இரட்ணம் நினைவாக அவரது துணைவியாரும் கிளி மக்கள் அமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சதானந்தன் அவர்களின் தாயாருமான திருமதி இரட்ணம் அவர்கள் நாட்டிவைத்தார் தொடர்ந்து அமரர் பிரான்சிஸ் ரவிந்திரன் பசில் நினைவாக வைத்தியர் குகராசா மற்றும் வைத்தியர் சத்தியமூத்தி ஆகியோர் நாட்டிவைத்தனர்.
இதனைத்தொடர்ந்து கல்லூரியின் 1001 மாணவர்களுக்கு பயன்தரும் மரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.