நடிகை பிரியங்கா சோப்ராவை கவர்ந்த ரூ.100 கோடி விலை மதிப்புள்ள பங்களாநடிகை பிரியங்கா சோப்ராவை கவர்ந்த ரூ.100 கோடி விலை மதிப்புள்ள பங்களா

பாலிவுட் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா ரூ.100 கோடி மதிப்புள்ள    பங்களாவை வாங்க திட்டமிட்டிருக்கிறார். ஷூட்டிங்கிற்காக பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவில் பங்களாக்களில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்திருக்கிறார். அப்போது ஒரு சில பங்களா அவரை கவர்ந்தது. அதை வாங்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தார். அந்த கனவு நனவாகும் தருணம் வந்திருக்கிறது.

மும்பையில் கடற்கரையை ஒட்டிய வெர்சோவா பகுதியில் 1930ம் ஆண்டு பிரிட்டிஷ் கட்டிட கலை நிபுணரின் வேலைப்பாடுகளுடன் கட்டிய தரியா மஹால் பங்களா உள்ளது. அங்கு நடந்த ஷூட்டிங்கில் பிரியங்கா கலந்து கொண்ட போது அந்த பங்களா அவர் மனதை கவர்ந்தது. எப்படியாவது அதை வாங்குவது என்று முடிவு செய்திருக்கிறார். இதன் மதிப்பு ரூ.100 கோடி.

கடற்கரை அழகை ரசிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கும் இந்த பங்களாவில் 15 பெட் ரூம்கள் இருக்கிறது. பெரும்பாலும் இந்த பங்களா ஷூட்டிங் நடத்தவே வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. சில பெரும் கைகள் ஆடம்பர விழா நடத்த பயன்படுத்தி கொள்கின்றனர்.

இதே பங்களாவை வாங்க வேறு ஹீரோக்கள் முயன்று விலை கட்டுபடியாகாததால் கைவிட்டுவிட்டனர். குறிப்பிட்ட பங்களாவை தவிர ஜூஹு பகுதியிலும் மற்றொரு பிரமாண்ட பங்களா மீதும் கண் வைத்திருக்கிறாராம் பிரியங்கா சோப்ரா. தனியாக பிரியங்காவால் இந்த பங்களாவை வாங்க முடியாது. சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவருடன் சேர்ந்தே அவர் இதை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் அடிபடுகின்றன.

ஆசிரியர்