கொழும்பு – தெஹிவளையில் அமையப்பெற்றுள்ள விஸ்ணு ஆலயம் புராதனமான ஆலயமாகும். இந்த ஆலயம் தொடர்பில் செவிவழி கதைகள் பல இருக்கின்றன.
அந்த வகையில் ஆலயத்தின் நிருதி மூளையில் இருக்கும் ஒரு பாம்பின் புற்றில் பகவான் இருந்த போது பசுவொன்று பால் சொரிந்துள்ளது. இதனை ஞானதிருஷ்டியால் பார்த்த சுவாமியாரொருவர் புற்றை அகற்றுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து புற்று உடைக்கப்பட்ட போது பகவான் விஷ்ணு வெளிவந்துள்ளார் என கூறப்படுகிறது. இதேநேரம் வரலாறுகளில் பல அழிவுகளையும் இந்த ஆலயம் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
சில வன்செயல் சம்பவங்களினால் ஆலயத்தின் விக்கிரங்கள் உடைக்கப்பட்டு கிணற்றுக்குள் போட்டு பூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அரசாங்கத்தின் நடவடிக்கையின் கீழ் கிணற்றிலிருந்து விக்கிரகங்கள் எடுக்கப்பட்டு ஆலயமாக புனருத்தானம் செய்யப்பட்டு தற்போது இலங்கையிலே முதன்மை பொருந்திய ஆலயமாக விளங்குகிறது.
நன்றி : வவுனியாநெட்.காம்