Saturday, April 13, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் விரைவாக கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும்..

விரைவாக கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும்..

2 minutes read

கருவுறுதலை எதிர்நோக்கும் தம்பதியருக்கு குறிப்பாக மருத்துவ காரணங்கள் எதுவும் இன்றி கருவுறுதல் தாமதமானால் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கருத்தரிக்கலாம்.

உண்மையில் நீங்கள் மேற்கொள்ளும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் கருவுறுதலுக்கு உங்களை தயார்படுத்தும். வரும் 2024 ஆம் ஆண்டு குழந்தைப்பேறை பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கும் தம்பதியருக்கு நிச்சயம் இந்த குறிப்புகள் உதவும்.

​கருத்தரிப்பதற்கு முன்பு மருத்துவரிடம் தம்பதியர் இருவரும் பொதுவான பரிசோதனைக்கு செல்வது நல்லது. கர்ப்பத்தை பாதிக்கும் சிக்கல்கள் இருந்தால் இதை முன்கூட்டியே கண்டறிய உதவும்.

 

வயது காரணத்தால் கருவுறுதல் பாதிப்பு
போன்ற அனைத்தையும் விரிவாக உங்கள் குடும்ப நல மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவருடன் திட்டமிடுங்கள். இதை பின்பற்றி உங்கள் வாழ்க்கை முறை உணவு முறையை ஆரோக்கியமாக திட்டமிடலாம்.

உடற்பயிற்சி செய்வது

இயல்பாக உடற்பயிற்சி செய்வது இதயம், நுரையீரல் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு நன்மை செய்யும். அதிக எடை மற்றூம் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வழக்கமான உடற்பயிற்சி மிகமுக்கியமானது.

உடல் எடை அதிகம் இருப்பது கருத்தரிப்பை தாமதமாக்கலாம். அதில் சிக்கலை உண்டு செய்யலாம். ஆய்வு ஒன்றின் படி உடல் எடை சீராக இருக்கும் போது கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 30 முதல் 60 நிமிடங்கள் வரை தீவிரமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது மலட்டுத்தன்மை அபாயத்தை குறைக்கும். கருவுறுதலை மேம்படுத்த செய்யும்.

வாரத்தில் 150 முதல் 300 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். 75 முதல் 150 நிமிடங்கள் வரை தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டும். இரண்டு நாட்கள் தசையை வலுப்படுத்தும் உடற்பயிற்சி செய்யலாம்.

ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி , ஓடுவது என்று உடற்பயிற்சியோடு உடல் உழைப்புக்கும் வேலை கொடுங்கள். இது கருவுறுதலை விரைவுப்படுத்த செய்வதோடு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

குழந்தையின்மையால் மன அழுத்தம் இருந்தால் ஆழ்ந்த சுவாசம், தியானம் மற்றும் யோகா பயிற்சிகளை செய்யலாம்.

​கருவுறுதலை மேம்படுத்தும் தூக்க முறை​

தூக்கம் கருவுறுதலுக்கு முக்கியமானது. தூக்கமின்மை நீண்ட கால உடல்நல பிரச்சனைகளை உண்டு செய்யலாம். தூக்கமின்மையால் ஹைபோதாலமிக் பிட்யூட்டரி சுரப்பி செயல்படுத்துதல் மற்றும் சர்க்காடியன் போன்றவை இனப்பெருக்கத்தில் தலையிடலாம் என்கிறது ஆராய்ச்சி. சிறிய ஆய்வு ஒன்று இரவு நேர பணியில் இருக்கும் நபர்களிடம் கருச்சிதைவு விகிதம் மிதமான அதிகம் கொண்டிருப்பதை கண்டறிந்துள்ளது.

மோசமான தூக்கம் அதிக எடையை உண்டு செய்யும். இதனால் அண்டவிடுப்பின் பிரச்சனை தோன்றலாம். அதிக எடை , உடல் பருமன் போன்றவை ஆண்களுக்கும் விந்தணு ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

கருத்தரிக்கும் முயற்சியில் இருந்தால் போதுமான தூக்கம் குறித்து முயற்சி எடுங்கள். தூக்கத்தை சீர்குலைக்கும் எந்த விஷயங்களையும் ஊக்குவிக்காதீர்கள்,. கேட்ஜட் சாதனங்கள், இரவு நேர பணி என எதுவாக இருந்தாலும் தூக்க நேரத்தை கடைப்பிடிப்பது சிறந்த தூக்க சுகாதாரத்தை அளிக்கும். மன அழுத்தம் தூண்டாது.

கருவுறுதலுக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள்

கருவுறுதலை மேம்படுத்த ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் ஆரோக்கியமும் அவசியம். இவை இரண்டுக்கும் வேண்டிய ஊட்டச்சத்துக்களை பெறுவது நலம் பயக்கும். கருவுறுதல் சிகிச்சையில் உணவு முறை குறித்து குழப்பம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசித்து ஊட்டச்சத்து நிபுணரிடம் உணவு அட்டவணை வாங்கி பயன்படுத்தலாம்.

காய்கறிகள், பழங்கள், தானியங்கள், புரதங்கள் மற்றும் பால் போன்ற உணவுகளில் ஆதிக்கம் செலுத்துங்கள். போதுமான திரவ ஆகாரங்களை எடுத்துகொள்ளுங்கள். இது கருவுறுதலை மேம்படுத்தும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும்.

​கருவுறுதலுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஆரோக்கியமற்ற உணவுகள் உடலுக்கு மட்டும் அல்ல கருவுறுதலையும் பாதிக்கலாம். தொடர்ந்து அதிக இனிப்புகள் எடுப்பது உடல்நலம் போன்று கருவுறுதலிலும் பாதிப்பை உண்டு செய்யும்.

அதிக எடை மற்றும் உடல் பருமன், இதய நோய், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு, புற்றுநோய் போன்ற பாதிப்பையும் உண்டு செய்யலாம். இனிப்பு நிறைந்த உணவுகள் நிறுத்துவது ஒரே நாளில் நடக்காது என்றாலும் படிப்படியாக இதை குறைத்துவிட முடியும்.

காஃபைன் திரவங்கள் கருவுறுதலை பாதிக்கலாம் என்பதற்கு தெளிவான குறிப்புகள் இல்லை எனினும் இதை உட்கொள்வது கருச்சிதைவுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது என்கிறது ஆய்வுகள். காஃபி பிரியம் என்றாலும் நாள் ஒன்றுக்கு 200 மிகி மேல் எடுக்க கூடாது.

​கருவுறுதலை பாதிக்கும் பழக்கங்கள்​

ஆரோக்கியமற்ற உணவு போன்றே மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் இரண்டும் கருவுறுதலை பாதிக்க கூடியவை. இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பெண்கள் மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தால் கருவுறுதலை அறியும் வரை மதுவை தவிர்ப்பதே கருவுக்கு நல்லது.

மது அருந்தும் பெண்களுக்கு கருப்பை இருப்பு குறையும். ஆண்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்று சொல்லப்படுகிறது. அதே போன்று பெண் புகைப்பழக்கம் கொண்டிருந்தாலும் கர்ப்பத்துக்கு தீங்கு விளைவிக்கும். இந்த பழக்கம் கொண்டிருப்பவர்களுக்கு கருச்சிதைவு, பிரசவம் மற்றும் எக்டோபிக் கர்ப்பம் போன்ற ஆபத்துகள் உண்டு.

புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இரண்டும் விட்டுவிடுவது எளிதானது அல்ல. ஆனால் கருவுறுதல் எதிர்பார்ப்பு இருக்கும் போது இதிலிருந்து வெளியேறுவது மட்டுமே உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More