நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் சிவகுமார் தனது ஓவியக் கலையை மிகவும் பெரிதாக மதிப்பவர். இவர் ஓவியக் கலையில் மிகவும் திறமை வாய்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இவர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து வைத்திருக்கிறார்.
எல்லா ஓவியங்களையும் தனது வீட்டிலேயே பாது காத்து வைத்திருக்கிறார். இவர் தற்போது தி.நகர் கிருஷ்ணன் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இதே வீட்டில் தான் சூர்யா, கார்த்திக்குடன் கூட்டு குடும்பமாக இருந்து வருகிறார்கள்.
நடிகர் சூர்யா தற்போது தி.நகரின் இன்னொரு பகுதியில் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். இதன் வேலைகள் முடிந்ததும் விரைவில் அங்கு குடியேற உள்ளனர்.
அதனால் பழைய வீட்டை கலைக் கூடமாக மாற்ற முடிவு செய்துள்ளார் சிவகுமார். சமீபத்தில் இந்த செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
இவர் வரைந்த சில ஓவியங்களை உங்களுக்காகத் தருகிறோம்.