டான்ஸ் மூவ்மெண்டில் சந்தியாவையே ஓவர் டேக் செய்த பரோட்டா சூரிடான்ஸ் மூவ்மெண்டில் சந்தியாவையே ஓவர் டேக் செய்த பரோட்டா சூரி

முகமூடி படத்திற்குப் பிறகு நரேன் நடிக்கும் படம் கத்துக்குட்டி. இரா.சரவணன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சூரி நகைச்சுவைக் கதாபாத்திரத்துக்காக நரேனுடன் கைகோர்த்திருக்கிறார். இன்னொரு சிறப்பம்சமாக பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் இதில் நரேனின் தந்தையாக அறிமுகமாகிறார். யா யா படத்தில் சந்தானத்துக்கு ஜோ‌டியாக நடித்த சந்தியா இந்தப் படத்தில் சூரிக்கு ஜோ‌டியாக நடிக்கிறார்.

சூரியுடன் அவருக்கு ஒரு குத்துப் பாடலும் உள்ளது. அருள்தேவின் அட்டகாசமான இசையில் உருவாகியுள்ள இந்த குத்துப் பாடலில் சூரியுடன் சந்தியா ஆடியுள்ளார். பாடல் காட்சியில் மிக நெருக்கமாக ஆட சூரி ரொம்பவே கூச்சப்பட, உங்களுக்கு டான்ஸ் மூவ்மெண்ட் நன்றாக வருகிறது.

இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது? உங்களின் காமெடி நடிப்புக்கு நான் பெரிய ஃபேன். அதனால் தயங்காமல் ஆடுங்கள்” என சந்தியா சொன்னதுதான் தாமதம். படு வேகமான மூவ்மெண்ட்ஸ் போட்டு சந்தியாவையே ஓவர் டேக் செய்கிற அளவுக்கு ஆடி, கைத்தட்டல் பெற்றாராம் சூரி.

ஆசிரியர்