செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை நஸ்ரியா காதல் நிக்காஹ் நடிகை நஸ்ரியா காதல் நிக்காஹ்

நடிகை நஸ்ரியா காதல் நிக்காஹ் நடிகை நஸ்ரியா காதல் நிக்காஹ்

1 minutes read

மலையாள நடிகை நஸ்ரியா ‘நேரம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து நய்யாண்டி, ராஜாராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்காஹ் படங்களில் நடித்தார். வசீகர தோற்றத்தாலும், துறுதுறு நடிப்பாலும் தமிழக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இவரது வரவால் பிரபல நடிகைகள் அச்சம் அடைந்திருந்தனர்.

இந்தநிலையில் மலையாள நடிகர் பகத் பாசிலுடன் அவர் காதல் வயப்பட்டார். மலையாளத்தில் ‘எல் பார் லவ்’ படத்தில் நடித்த போது இவருக்கும், பகத் பாசிலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பகத் பாசில் பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகன் ஆவார். இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நிச்சயதார்த்த விழா திருவனந்தபுரத்தில் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து ஆகஸ்டு 21–ந் தேதி பகத் பாசிலுக்கும், நஸ்ரியாவுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவர்கள் திருமணம் இன்று திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் உள்ள அல்ஷாஜ் திருமண மண்டபத்தில் நடந்தது. 2 பேரும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் முஸ்லீம் மத வழக்கப்படியே சடங்குகள் செய்யப்பட்டு திருமணம் நடந்தது.

இதில் சினிமா துறையினர், அரசியல் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் திருமண மண்டபம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 24–ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆலப்புழாவில் நடக்கிறது. திருமணத்திற்கு பின்பு நஸ்ரியா சினிமாவில் நடிப்பாரா? என்பதை பஹத் பாசில் முடிவு செய்வார் என நஸ்ரியா கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More