தீபாவளிக்கு ‘உத்தமவில்லன்’, ‘கத்தி’, ‘ஐ’, ‘பூஜை’, ‘அனேகன்’ ஆகிய ஐந்து பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
முன்னணி நடிகர்கள் இப்படங்களில் நடித்துள்ளதால் தியேட்டர்கள் ஒதுக்கும் பணி இப்போதே துவங்கி உள்ளது. ‘உத்தமவில்லன்’ படத்தில் கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளனர். ஜெயராமும் முக்கிய கேரக்டரில் வருகிறார். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இதில் கமல் வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறார். காமெடி, ஆக்ஷன் படமாக தயாராகிறது.
‘கத்தி’ படத்தில் விஜய், சமந்தா ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இதில் விஜய் இரு வேடங்களில் வருகிறார். ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வந்த ‘துப்பாக்கி’ படம் வெற்றிகரமாக ஓடியதால் இதற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஆக்ஷன் படமாக தயாராகி உள்ளது.
‘ஐ’ படத்தில் விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். ஷங்கர் இயக்கியுள்ளார். ரூ.180 கோடி செலவில் இப்படம் தயாராகி உள்ளது. இந்திய திரையுலகி வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள படம் இதுவாகும். ஹாலிவுட் தரத்தில் தயாராகியுள்ளது. 20 ஆயிரம் பிரிண்ட்கள் போடப்பட்டு உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
‘பூஜை’ படத்தில் விஷால், சுருதிஹாசன், ஜோடியாக நடித்துள்ளனர். ஹரி இயக்கியுள்ளார். இதுவும் ஆக்ஷன் படமாகும். ஏற்கனவே விஷால், ஹரி கூட்டணியில் தாமிரபரணி படம் வந்தது. ‘அனேகன்’ படத்தில் தனுஷ், அம்ரியா ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக்கும் முக்கிய கேரக்டரில் வருகிறார். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார்.