ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கிரியேட்டிவ் செயல்திட்ட இயக்குனராக சவுந்தர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் ‘கோச்சடையான்’ படத்தை இயக்கியவர் சவுந்தர்யா ரஜினிகாந்த். ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்போது இந்தநிறுவனத்தின் கிரியேட்டிவ் செயல் திட்ட இயக்குனர் மற்றும் டிஜிட்டல் முயற்சிகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ஈராஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜோதி தேஷ்பாண்டே கூறும்போது, ‘டிஜிட்டல் துறையில் சவுந்தர்யாவின் அனுபவம்,அவரை சிறந்த தலைவராக உருவாக்கும்’ என்றார்.
0