0
ஆர்யாவின் தம்பி, சத்யா நடித்துள்ள ”அமரகாவியம்” படம் பார்க்க சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுக்கும் – நயன்தாராவுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னர் காதலாக மாறியது. ஒருகட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து ஒருவரை ஒருவர் எங்காவது சந்தித்து கொண்டால் கூட முகத்தை திருப்பி கொண்டு போனார்கள்.
அப்படி இருந்தவர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் தற்போது ”இது நம்ம ஆளு” படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவை ஹீரோவாக்கி தயாரித்துள்ள அமரகாவியம் படம் நேற்று ரிலீஸானது. இதனையொட்டி தனது திரையுலக நண்பர்களுக்கு படத்தை காண்பிக்க விசேஷ ஷோவிற்கு ஏற்பாடு செய்திருந்தார் ஆர்யா. இதில் நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ஷாம், உதயநிதி, விஷ்ணு, விஜயசேதுபதி, கிருஷ்ணா, லட்சுமி ராய், ஜனனி அய்யர், அட்லீ, ஜீ.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பிரஸ் ஷோவில் ஹைலைட்டாக அமைந்தது சிம்புவும்- நயன்தாராவும் தான். படம் பார்க்க இருவரும் ஜோடியாக வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். போட்டோகிராபர்களுக்கு ஜோடியாக, போஸ் கொடுத்தார்கள். இரண்டு பேரையும் பார்க்க ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் நயன்தாராவை பாதுகாப்பாக அழைத்து சென்றார் சிம்பு.
நாங்கள் இருவரும் நட்புடனேயே பழகி வருகிறோம் என்று சிம்பு-நயன்தாரா இருவரும் கூறி வருகின்றனர்