March 24, 2023 3:57 am

பாலிவுட்டில் காது கேளாத, வாய் பேசாத இளம் நடிகை அபிநயாபாலிவுட்டில் காது கேளாத, வாய் பேசாத இளம் நடிகை அபிநயா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

காது கேளாத, வாய் பேசாத நடிகை அபிநயா பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. கிளாமர் ஹீரோயின்கள் அசின், காஜல் அகர்வால், இலியானா, டாப்ஸி என தென்னிந்திய நடிகைகள் வரிசையாக பாலிவுட் படங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட்டில் நுழைவதற்கு கிளாமர் தேவையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இளம் நடிகை அபிநயா. சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள் படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்தவர். இவருக்கு பேச்சும் வராது, காதும் கேட்காது. ஆனால் இயக்குனர் சொல்லித்தருவதை பார்வையாலேயே கிரகித்துக்கொண்டு நடிக்கும் திறமை கொண்டவர். இவருக்கான பாலிவுட் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. அமிதாப்பச்சன், தனுஷ், கமல் மகள் அக்ஷரா நடிக்கும் படம் ‘ஷமிதாப். ஆர்.பால்கி டைரக்டு செய்கிறார். இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் அபிநயா. காது கேளாத, வாய் பேசாத நடிகையால் எப்படி படத்தில் நடிக்க முடியும் என்று பாலிவுட்டில் சிலர் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்களாம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்