மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் மீனா!மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் மீனா!

அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாகநடித்தவர் மீனா. அப்படத்தின் ரஜினி அங்கிள் என்று ரஜினியை அழைத்த மீனா, அதன்பிறகு சில ஆண்டுகளிலேயே வேகமாக வளர்ந்து அதே ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்தார்.

வீரா, முத்து, எஜமான் என அவர் ரஜினியுடன் நடித்த படங்களும் சூப்பர் ஹிட்டானதால் அப்போது நம்பர்-ஒன் நடிகையானார் மீனா. அதையடுத்து கமல் உள்பட அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தவர், திருமணத்துக்குப்பிறகு பெங்களூரில் செட்டிலானார்.

ஆனபோதும், மீண்டும் நடிப்பு ஆசை துளிர் விட, மறுபடியும் கோடம்பாக்கத்துக்கு வந்த மீனா, நரேன் நடித்த தம்பிக்கோட்டை படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் வெற்றி பெறாததால் மீனாவை அதன்பிறகு யாருமே கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் தனது முயற்சிகளை பரவலாக செய்து வந்த மீனாவை மலையாள பட உலகம் இப்போது ஆதரித்துள்ளது.

மோகன்லாலுக்கு ஜோடியாக அவர் நடித்த த்ரிஷ்யம் என்ற படம் ஹிட்டாகியிருப்பதை அடுத்து மலையாளத்தில் மீனாவுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து மம்மூட்டிக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அடுத்து தமிழில் நடிப்பதற்கும் கல்லெறிந்து வருகிறார் மீனா. தனது மாஜி ஹீரோக்கள் சிலரை சந்தித்து உங்கள் படங்களில் ஏதாவது கேரக்டர் இருந்தால் வாங்கித்தாருங்கள் என்று கேட்கும் மீனா, சில நெருக்கமான டைரக்டர்களிடம் கண்டிப்பாக எனக்கு நடிக்க சான்ஸ் தந்து என்னை ஆதரிக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்கிறாராம்.

இதனால், மாஜி ஹீரோயினிகளான சரண்யா, நதியா, ரோஜா பக்கம் திரும்பி நின்ற சில இயக்குனர்கள் இப்போது மீனா அவர்களை விடவும் இளமையாக, அழகாகத்தானே இருக்கிறார். அவருக்கு நல்ல வேடம் கொடுக்கலாமே என்று மீனாவை தங்களது அபிமான நடிகை பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளனர்.

 

ஆசிரியர்