September 21, 2023 2:11 pm

த்ரிஷா நடித்த ‘பவர்’ கன்னடப் படம் 50 கோடி வசூல் ஆகும் என எதிர்பார்ப்பு த்ரிஷா நடித்த ‘பவர்’ கன்னடப் படம் 50 கோடி வசூல் ஆகும் என எதிர்பார்ப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

கன்னடத் திரையுலகின் 80 வருட கால சாதனையை த்ரிஷா அறிமுகமாகியுள்ள கன்னடப் படமான ‘பவர்’ முறியடிக்கும் என சான்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இந்தப் படம் வெளியான முதல் வாரத்திலேயே சுமார் 20 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. படம் வெளிவந்து இரண்டு வாரங்களுக்குள் இந்தப் படத்தின் வசூல் 30 கோடியைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.

சமீப காலத்தில் கன்னடப் படங்களின் வெற்றியும் பல கோடிகளில் புரள ஆரம்பித்து விட்டது. ‘நான் ஈ’ சுதீப், சரத்குமாரின் மகளான வரலட்சுமி நடித்த ‘மானக்யா’ என்ற கன்னடப் படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து சுமார் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாம். அந்தப் படத்தின் வசூலை ‘பவர்’ படம் ஏற்கெனவே முறியடித்து விட்டதாகவும், மொத்தமாக இந்தப் படத்தின் வசூல் 50 கோடியைத் தொட்டு விடும் என்கிறார்கள்.

அதிலும் தமிழ் நடிகையான த்ரிஷா ஏற்கெனவே தெலுங்கில் ‘வர்ஷம்’ படம் மூலம் மிகப் பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தினார். அதே போல் கன்னடத்திலும் அவர் நடித்த, அதுவும் அறிமுகமான படம் இந்த அளவு வசூல் செய்திருப்பதை த்ரிஷாவின் ராசி என்றே அவருக்கு நெருங்கியவர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்