March 24, 2023 3:17 am

நயன்தாராவை பிரிந்தபோது இருந்த வருத்தம், ஹன்சிகாவை பிரிந்தபோது இல்லை | சிம்புநயன்தாராவை பிரிந்தபோது இருந்த வருத்தம், ஹன்சிகாவை பிரிந்தபோது இல்லை | சிம்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நயன்தாராவை பிரிந்தபோது இருந்த வருத்தம், ஹன்சிகாவை பிரிந்தபோது இல்லை என்றார் சிம்பு.இது பற்றி அவர் கூறியதாவது:காதல் முறிவு பற்றி கேட்கிறார்கள். கடந்த காலங்களில் எனக்கு ஏற்பட்ட காதல் முறிவு (நயன்தாராவுடன்) வருத்தத்தை கொடுத்தது.

அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க நீண்ட தூர பயணங்கள் செய்தேன். ஆனால் ஹன்சிகாவுடன் ஏற்பட்ட ‘பிரேக் அப் (பிரிவு) எனக்கு மனஅழுத்தம் தரவில்லை. பிரிந்த முதல்நாளிலிருந்தே நான் வழக்கம்போலவே எனது பணிகளை செய்யத் தொடங்கிவிட்டேன்.

இதற்கு என்ன காரணம் என்பதை வெளியில் சொல்வதில்லை என்று இருவரும் முடிவு செய்திருக்கிறோம். பிரிவை ஏற்கும் பக்குவம் எனக்கு வந்துவிட்டதால் அதிலிருந்து என்னால் வெளிவர முடிந்தது.

மீண்டும் காதல் வருமா என்பது தெரியாது. ஆனால் சில காலத்துக்கு காதல் வேண்டாம் என்றே எண்ணுகிறேன். இப்போதுள்ள நிலையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தனியாக இருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

திருமணம் செய்துகொண்டவர்கள் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்களா என்பதை ஒவ்வொருவரின் வீட்டு விவகாரங்களுக்குள் சென்றுபார்த்தால்தான் தெரியும். இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். என் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு தாமதம் ஆகிறது. இந்த சூழல் எல்லோருக்கும் வருவதுதான். அது சரியாகிவிடும்.இவ்வாறு சிம்பு கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்