ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்ற விழாவில் கமலஹாசன் கலந்து கொள்ளவில்லை- அப்பல்லோ மருத்துவமனையில்?ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்ற விழாவில் கமலஹாசன் கலந்து கொள்ளவில்லை- அப்பல்லோ மருத்துவமனையில்?

நடிகர் கமலஹாசன் இன்று காலை 11 மணி அளவில் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் பிரிவு டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவருக்கு நரம்பு கோளாறு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். கமலஹாசன் தொடர்ந்து சில நாட்கள் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றதால் அவருக்கு நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று நடந்த ‘ஐ’ பட இசை வெளியீட்டு விழாவில் கமலஹாசனும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மற்றும் ரஜினி ஆகியோர் இதில் பங்கேற்றனர். ஆனால் விழாவில் கமலஹாசன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்