ஐஸ் பக்கெட் சேலஞ் போல் மரக்கன்று நடும் சவாலும் பிரபலமாகி வருகிறது.
சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மரக்கன்று நட்டு விஜய், சூர்யாவுக்கு இது போல் மரக்கன்று நடமுடியுமா என சவால் விடுத்தார். அதை விஜய் ஏற்றுக் கொண்டு மரக்கன்று நட்டார். தனது ரசிகர்கள் மரக்கன்று நடவும் அவர் சேலஞ்ச் விடுத்தார்.
தற்போது சூர்யாவும் மம்முட்டியின் சவாலை ஏற்று மரக்கன்று நட்டார். அத்துடன் இந்தி நடிகர் அமீர்கான், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, சுதீப் போன்றோரும் மரக்கன்று சேலஞ் விடுத்துள்ளனர்.