பெண்கள் மட்டும் இணைந்து உருவாக்கும் சினிமாபெண்கள் மட்டும் இணைந்து உருவாக்கும் சினிமா

சினிமாவில் நடிகை என்பதை தாண்டி மற்ற பணிகளுக்கு பெண்கள் வருவது மிகவும் குறைவு. எப்போதாவது ஒரு இயக்குனர், கேமராமேன், இசை அமைப்பாளர்கள், என்று வருவார்கள் பின்பு சென்று விடுவார்கள்.முதன் முறையாக பெண்கள் மட்டுமே பணியாற்றி ஒரு சினிமாவை உருவாக்குகிறார்கள்.

இந்த முயற்சி நடப்பது இங்கல்ல கன்னடத்தில்-. படத்தின் பெயர் ரிங்கோடு சுபா. இதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் அனைவருமே பெண்கள்தான்.குறும்பட இயக்குனர் ப்ரியா பெல்லியப்பா இயக்குனர், இவர் புனே திரைப்படக்கல்லூரியின் மாணவி. படத்தின் ஹீரோயின் குஷி, தயாரிப்பாளர் ரஞ்சனி ரவீந்திரதாஸ் ஆகியோரும் பெண்களே. ரேகா ராணி வசனம் எழுதியுள்ளார், ரேஷ்மி சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வாணி ஹரிகிருஷ்ணா இசை அமைத்துள்ளார். மரிய டிசோஸா எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். பூனம் பிரசாத் ஒப்பனை கலைஞராகவும், அவிஷா மற்றும் மெஹிஷா புகைப்பட கலைஞர்களாகவும், மயூரி, சந்திரிகா, ஷக்தி ஆகியோர் நடன இயக்குனர்களாகவும் பணியாற்றி உள்ளனர். துனியா விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். அவினாஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ஆசிரியர்