செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை – சுருதிஹாசன்திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை – சுருதிஹாசன்

திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை – சுருதிஹாசன்திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை – சுருதிஹாசன்

1 minutes read

திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.

சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமலஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.

தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன் முதலில் குழந்தை பெற்றுக் கொள்வேன். அதன் பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சுருதிஹாசன் கூறினார்.

சுருதிஹாசன் மும்பையில் தற்போது புது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த வீட்டில் அவர் மேல் தாக்குதல் நடந்தது. பின்னர் தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அந்த வீட்டை காலி செய்து விட்டு தோழி வீட்டில் தங்கினார்.

அதன் பிறகு அந்தேரி பகுதியில் அபார்ட்மென்ட்டில் 2 படுக்கையறையுடன் கூடிய வீடு ஒன்றை சொந்தமாக விலைக்கு வாங்கினார். அங்கு ஓரிரு மாதங்களாக உள் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. நவீன இருக்கைகள், கட்டில் ஷோபாக்களும் வாங்கி போடப்பட்டன. அந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சுருதிஹாசன் அவ்வீட்டில் பால் காய்த்து குடியேறியுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.