சுருதிஹாசன் சம்பளம் குத்துப்பாடலுக்கு இந்திய ருபாய் 40 லட்சம் சுருதிஹாசன் சம்பளம் குத்துப்பாடலுக்கு இந்திய ருபாய் 40 லட்சம்

சுருதிஹாசன் தற்போது ஹரி இயக்கிவரும் ‘பூஜை’ படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் மட்டுமல்லாது பிற மொழிப்படங்களிலும் சுருதி நடித்து வருகிறார். தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘யவடு’ படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரவே, மகேஷ் பாபு நடிக்கும் ஆகடு படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட ஒப்பந்தமாகினார். இப்பாடல் காட்சிகள் படமாக்கும் போது சுருதியின் கவர்ச்சியான படங்கள் இன்டர்நெட்டில் பரவின.

தற்போது இப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் குத்துப்பாடலுக்கு சுருதிஹாசன் நடித்ததற்கு சம்பளமாக 40 லட்சம் வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

‘பூஜை’ படத்தையடுத்து சுருதிஹாசன், சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

ஆசிரியர்