அடுத்து தான் இசையமைக்க இருக்கும் மணிரத்னம் படத்தில் தனது மகன் அமீன் பாட வாய்ப்பு இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 2ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் தனது இசைக் கச்சேரிக்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அச்சந்திப்பில் “எனது மகனுக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், அவரது கவனம் படிப்பில் இருப்பதையே நான் விரும்புகிறேன். எனினும், அமீன் நான் இசையமைக்க இருக்கும் அடுத்த மணிரத்னம் படத்தில் பாட வாய்ப்பு இருக்கிறது” என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஹாலிவுட் படமான ‘Couples retreat’ என்ற படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் அமீன். மணிரத்னம் படத்தில் அமீன் பாடவிருக்கும் பாடல், தமிழ் திரையுலகில் அவரது முதல் பாடலாக அமையவிருக்கிறது.