கார்த்திக்கு மக்கள் நாயகன் பட்டம்- அரசியலில் ஈடுபட திட்டம் உள்ளதா ?கார்த்திக்கு மக்கள் நாயகன் பட்டம்- அரசியலில் ஈடுபட திட்டம் உள்ளதா ?

கார்த்தி, கேத்ரின் திரேஷா ஜோடியாக நடித்த மெட்ராஸ் படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராய நகரில் நடந்தது. அப்போது கார்த்திக்கு ‘மக்கள் நாயகன்’ பட்டம் வழங்கப்பட்டது. மெட்ராஸ் படத்தில் நடித்த ஜெயராவ் பேசும் போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மக்களோடு, மக்களாய் இருப்பது போன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடித்து மக்கள் நாயகனாக திகழ்ந்தார். அவருக்கு பிறகு அதே போன்ற படங்களில் நடித்து மக்கள் நாயகன் பட்டத்துக்கு பொருத்தமானவராக கார்த்தி திகழ்கிறார் என்றார்.

இதையடுத்து நிருபர்கள் கார்த்தியிடம் மக்கள் நாயகன் பட்டம் பெற்றுள்ளீர்கள். அரசியல் படத்திலும் நடித்து இருக்கிறீர்கள். அரசியலில் ஈடுபட திட்டம் உள்ளதா என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த கார்த்தி. வம்பில் இழுத்து விடாதீர்கள். மெட்ராஸ் படம் அரசியல் கதையாக இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்தது. அதனால் தான், அந்த படத்தில் நடித்தேன். அரசியல் பற்றி எந்த சிந்தனையும் இல்லை என்றார்.

ஆசிரியர்