ஐ டீஸைரை பாராட்டியவர்களுக்கு நன்றி சொன்ன ஷங்கர்ஐ டீஸைரை பாராட்டியவர்களுக்கு நன்றி சொன்ன ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் நடித்திருக்கும் ஐ டீஸரை இதுவரை 71 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யு டியூப்பில் கண்டுகளித்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான இந்த டீஸரை, ரசிகர்களை மட்டுமின்றி, திரையுலகப் பிரபலங்கள் பலரையும் வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.

ஐ டீஸரைப் பார்த்து தாங்கள் ரசித்தது பற்றி கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டைச் சேர்ந்த பல பிரபலங்களும் டுவிட்டரில் தங்கள் வியப்பை வெளிப்படுத்தியதோடு, இயக்குநர் ஷங்கருக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர். ஐ படத்தின் டீஸரை வெளியிட்டுவிட்டு, மக்களின் ரியாக்ஷனை அமைதியாக கவனித்து வந்தார் ஷங்கர். அதுமட்டுமல்ல, பிரபல நட்சத்திரங்கள், இயக்குநர்களின் கமெண்ட்ஸையும் உன்னிப்பாக கவனித்து வந்தார். தன்னுடைய ஐ படத்தின் டீஸர் குறித்து ட்வீட் செய்துள்ள பிரபலங்களுக்கு தற்போது நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர். இவரின் இந்த நன்றிப் பட்டியலில் பலரது பெயர்கள் இடம்பெற்றுன்ன.

குறிப்பாக, தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, மற்றும் தமிழ்ப்பட இயக்குநர்கள் கார்த்திக் சுப்பராஜ், பாலாஜி மோகன், சௌந்தர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், சித்தார்த் ஆகியோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர்