சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நடிகை நளினி?சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நடிகை நளினி?

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்தல் நாளை மறுநாள் (12–ந்தேதி) நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு நடிகை நளினி, நடிகர்கள் ராஜேந்திரன், சிவன் சீனிவாசன் போட்டியிடுகின்றனர்.

நடிகை ஜெயதேவி சுயேச்சை வேட்பாளராக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். நளினி அணியில் செயலாளர் பதவிக்கு பூவிலங்கு மோகன், பொருளாளர் பதவிக்கு வீ.டி.தினகரன், துணை தலைவர் பதவிக்கு மனோபாலா, ராஜ்காந்த் ஆகியோரும் இணை செயலாளர் பதவிக்கு பாபூஸ், பரத், கன்யாபாரதி, சாதனா ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

ஆசிரியர்