நடிகர் விவேக் பங்கேற்பு | அமெரிக்க தமிழ் மைய விழாநடிகர் விவேக் பங்கேற்பு | அமெரிக்க தமிழ் மைய விழா

அமெரிக்காவின் கனக்டிகட் மாகாணத்தில் நடக்கும் அமெரிக்க தமிழ் மையத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

அமெரிக்க தமிழ் மையத்தின் முதலாம் ஆண்டு விழா கடந்த ஆண்டு சிறப்பாக நடந்தது. விழா முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்த்துடன் நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் ஆண்டு விழா வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. கனக்டிகட் மாகாணத்தில் உள்ள நியூ ஹேவன் நகரில் நடக்கும் விழாவில் சின்னக் கலைவாணர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். விவேக்கின் சிறப்புரையை தொடர்ந்து தமிழ் மற்றும் இந்திய கலை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பின்னர் விவேக் வழங்கும் நகைச்சுவை நிகழ்ச்சியும் இறுதியாக, நியூ ஜெர்சி அனிதாகிருஷ்ணா அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அமெரிக்கத் தமிழ் மைய நிறுவனர் முனைவர் பழனி சுந்தரம் கவனித்து வருகிறார். விழாவுக்கான டிக்கெட்டுகளை sulekha.com என்ற இணையதளத்தில் வாங்கலாம்.

 

 

ஆசிரியர்