ஸ்பைகி ஹேர் ஸ்டைலுடன் கலக்குகிறார் ரஜினி.ரஜினி நடிக்கும் ‘லிங்கா‘ படத்தின் வசனம் மற்றும் ஸ்டன்ட் காட்சிகள் முடிவடைந்து விட்டது. 2 பாடல்காட்சிகள் மட்டும் படமாக்க வேண்டி உள்ளது. இதற்காக இம்மாத இறுதியில் ஸ்காட்லாந்து செல்கிறார்.
தவிர ஹாங்காங், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கும் சென்று பாடல் காட்சிகள் படமாக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா இருவரும் பாடல் காட்சியில் ரஜினியுடன் பங்கேற்கின்றனர். ரஜினியின் நண்பராக இப்படத்தில் சந்தானம் நடிக்கிறார். இளைஞர் மற்றும் சுதந்திரத்துக்கு முந்தைய கதாபாத்திரம் என இருவித கெட்டப்பில் ரஜினி தோன்றுகிறார். யூத் கெட்டப்பில் வரும் ரஜினிக்கு நண்பராகத்தான் சந்தானம் நடிக்கிறார்.
தனது இணைய தள பக்கத்தில் ரஜினியுடன் காமெடி காட்சியில் சந்தானம் நடித்துள்ள ஸ்டில் வெளியிட்டிருக்கிறார். இதில் ஜீன்ஸ் பேன்ட், ஸ்பைகி ஹேர் ஸ்டைல் என ரஜினி கலக்கி இருக்கிறார். சுதந்திரத்துக்கு முந்தைய ரஜினியின் நண்பராக கருணாகரன் நடிக்கிறார்.