கத்தி திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளிவரும் “லைக்கா என்ற பெயர் நீக்கம் ?கத்தி திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளிவரும் “லைக்கா என்ற பெயர் நீக்கம் ?

கத்தி திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளிவரும் என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இப்பிரச்னையை சுமூகமாக தீர்க்க உதவிய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதனிடையே தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே இன்று நடைபெற்ற கூட்டத்தில் “லைக்கா” என்ற பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து திட்டமிட்டபடி நாளை படம் வெளிவருவது உறுதியாகிவிட்டது. இது தமிழகம்
முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 400 தியேட்டர்களில் “கத்தி” படம் திரையிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்