March 23, 2023 8:10 am

‘கத்தி’ படத்தின் இரண்டு நாள் வசூல்‘கத்தி’ படத்தின் இரண்டு நாள் வசூல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகர் விஜய்-சமந்தா நடிப்பில் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் சார்பில் ஏ.சுபாஸ்கரன், ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் கே.கருணாமூர்த்தி ஆகியோர் இணைந்து இதனை தயாரித்துள்ளனர். கத்தி படம் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கிறாதாம். தியேட்டர்களை பொறுத்தவரையில் ஒரு வாரத்திற்குண்டான பெரும்பாலான டிக்கட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, கத்தி படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் மட்டும் 30 கோடியை தாண்டி விட்டதாம். அடுத்த சில நாட்களில் வசூல் 50 கோடியைக் கடக்கும் என்கிறார்கள். அந்த வகையில, ஏற்கெனவே விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி சேர்ந்த துப்பாக்கி படத்தின் வசூலை ‘கத்தி’ படம் சீக்கிரமே முறியடித்துவிடுமாம். விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே ‘கத்தி’ படம் தான் சிறந்த படம் என்கிற கருத்து ரசிகர்கள் மத்தியில் காணப்படுவதால் கத்தி படத்தின் வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்