March 29, 2023 1:12 am

கத்தி பட இசையை பாராட்டி நடிகர் விஜய், அனிருத்துக்கு பியானோ பரிசு கத்தி பட இசையை பாராட்டி நடிகர் விஜய், அனிருத்துக்கு பியானோ பரிசு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-சமந்தா நடித்த ‘கத்தி’ படம் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இவருடைய இசையில் அமைந்துள்ள பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி பெரிய அளவில் ஹிட்டாகியிருந்தாலும், இந்த பாடல்களை திரையில் பார்க்கும்போது மிகவும் அழகாக இருந்தது. மேலும், படத்தில் இவரது பின்னணி இசையும் பரவலாக பேசப்பட்டது. படத்திற்கு பெரிய பலமாக இவரது இசையும் அமைந்தது.

இந்நிலையில், இவரது இசையை பாராட்டி நடிகர் விஜய், அனிருத்துக்கு ஒரு பியானோ ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதற்கு, அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது,

நன்றி விஜய் சார். இந்த புதிய பியானோ மிகவும் அழகாக இருக்கிறது. கத்தி படத்தின் மிகப்பெரிய வெற்றி, அதோடு இந்த பியானோ எனக்கு கத்தி படத்திற்காக கிடைத்த இரண்டாவது பரிசு என்று தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்