ஹீரோயின்களில் தமன்னா, ஹன்சிகா, ஸ்ரேயாவுக்கு அவர்களது நிறம் பிளஸ் பாயின்ட். அதிலும் தமன்னாவின் கலர் ரோஸ் கலந்த சிவப்பு என்பதால் அவருக்கு மேக்அப் போடுவதற்கும் அதிக நேரம் ஆவதில்லை. அவருடன் ஜோடியாக நடிக்கும் ஹீரோக்கள் தமன்னாவின் நிறத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவதுண்டு.கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என ஒரு ரவுண்டு வருவதற்கு தமன்னாவின் நிறம் ஒருவகையில் கைகொடுக்கிறது. தற்போது இந்தியில் கிலாடி குமார் என்ற படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக நடித்துள்ளார்.
தமன்னா பேசும்போது, அக்ஷய்குமாரின் நேரம் தவறாமை கண்டு வியந்திருக்கிறேன். 6 மணிக்கு முதல் ஷாட் வைத்தால் முதல்நபர £க அவர்தான் செட்டில் இருப்பார். அதுவும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக வந்திருப்பார். பெரிய ஸ்டார் என்ற அந்தஸ்த்தில் இருந் தாலும் நேரம் தவறாமையை கடைப்பிடிக்கும் அவரது குணம் என்னை கவர்ந்தது என்றார்.தொடர்ந்து அக்ஷய் பேசும் போது, பூக்கள் வாடி விடும் ஆனால் தமன்னா வாடமாட்டார். அவரது ஒளிரும் நிறம் எந்த நேரத்திலும் மங்குவதே இல்லை என்றார். அக்ஷயின் பேச்சை கேட்டு தமன்னா வெட்கத்தில் முகம் சிவந்தார்.
0