March 27, 2023 2:06 am

பிறந்த நாளில் தொடங்குகிறார் கமல்ஹாசன் | தூய்மை இந்தியா திட்டம்பிறந்த நாளில் தொடங்குகிறார் கமல்ஹாசன் | தூய்மை இந்தியா திட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தூய்மை இந்தியா திட்டத்தின் முதல் கட்டப் பணியை நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறார்.

“தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அத்திட்டத்தை முன்னேடுத்துச் செல்ல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 9 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பிரதமரின் அழைப்பு, எனக்கு அளிக்கப்பட்ட மிகச் சிறந்த கெüரவம் என நடிகர் கமல்ஹாசன் தெரித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தூய்மை இந்தியா இயக்கத்தின் முதல் கட்டப் பணிகள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தாம்பரம்-வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள மாதம்பாக்கம் ஏரியில் இருந்து தொடங்கப்பட உள்ளது.

இதில், எனது நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திரையுலக நண்பர்களும் கலந்து கொள்கிறார்கள்.

அன்று பிற்பகல் 3 மணி அளவில் சென்னை தூர்தர்ஷன் அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில், தூய்மை இந்தியா இயக்கத்தின் பணிகள் குறித்தும், இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கமல்ஹாசன் அறிவிப்பார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்