March 27, 2023 2:17 am

ஜோதிகா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் ஜோதிகா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சந்தோஷ் நாராயணன், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது தன்னுடைய கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். இவர் இசையமைப்பில் இந்த வருடத்தில் வெளிவந்த ‘ஜிகர்தண்டா’, ‘குக்கூ’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தன.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜோதிகா நடிக்கவிருக்கும் புதிய படம் மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

மலையாளத்தில் கோபி சுந்தர் என்பவர் இசையமைத்திருந்தார். தமிழுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெறுகிறது.

தமிழ் ரீமேக்கை மலையாள படத்தை இயக்கி ரோஜன் ஆன்ட்ரூவ்ஸே இயக்குகிறார். சூர்யா தனது சொந்த நிறுவனமான 4டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் தற்போது ‘இறுதிச்சுற்று’, கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் ‘இறவி’, நலன் குமாரசாமி இயக்கும் ‘கை நீளம்’, ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கும் பெயரிடப்படாத படம் என பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்