March 27, 2023 1:13 am

டிரம்ஸ் சிவமணிக்கும் இந்தி பின்னணி பாடகி ரூனாவுக்கும்-2–ம் திருமணம்டிரம்ஸ் சிவமணிக்கும் இந்தி பின்னணி பாடகி ரூனாவுக்கும்-2–ம் திருமணம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

விக்ரம் பிரபு நடித்து சமீபத்தில் வெளியான ‘அரிமா நம்பி’ படத்துக்கு இசையமைத்தவர் டிரம்ஸ் சிவமணி. சென்னையை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் டி.ராஜேந்தர் குழுவில் டிரம்ஸ் இசை வாசித்தார். பின்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து கச்சேரிகள் நடத்தினார்.

சிவமணி ஏற்கனவே திருமணமானவர். அவரது மனைவி பெயர் கிருஷாணி, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இந்தி பின்னணி பாடகி ரூனாவுக்கும் சிவமணிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

ரூனா இந்திப் படங்களில் பின்னணி பாடல் பாடி வருகிறார். இவர் பிரபல கஜல் பாடகர்களான ராஜ்குமார், இந்திராணி ரிஜ்வியம் மகள் ஆவார். ‘அரிமா நம்பி’ படத்தில் யாரோ யார் இவன் என்ற பாடலை ரூனா பாடி உள்ளார்.

இதற்கான பாடல் பதிவின் போது சிவமணிக்கும் ரூனாவுக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிவமணி கூறும்போது, ரூனாவும் நானும் காதலிக்கிறோம். வருகிற 10–ந்தேதி எங்கள் திருமணம் நடக்க உள்ளது என்றார். மும்பையில் இவர்கள் திருமணம் நடக்கிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்