March 20, 2023 9:32 pm

“நடு இரவு” | 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் “நடு இரவு” | 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஜெயலட்சுமி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எஸ்.மோகன்குமார் தயாரித்திருக்கும் படம் “நடு இரவு“.

கதாநாயகர்களாக சுதாகர், அருண், கிரிஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக மீனாட்சி, ஸ்ரீநிஷா,ஆயிசா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாப்பதிரத்தில் மோனிகா என்ற சிறுமி நடித்துள்ளார். அறுபது வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் இந்த நடு இரவுதான். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் புதுகை மாரிசா.

படம் குறித்து அவர் கூறியதாவது, ஒரு கிராமத்திற்கு நண்பனின் திருமணத்திற்காக போகும் மூன்று ஜோடிகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் ஒரு பங்களாவில் ஒரு இரவு மட்டும் தங்க முடிவு செய்கிறார்கள். அந்த பங்களாவில் ஏற்கனவே உள்ள பேய் அவர்களை எப்படி கொடுமை படுத்துகிறது என்பதையும், அவர்கள் பேயிடம் இருந்து தப்பிதார்களா இல்லையா என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அறியலாம்.

ஒருநாள் மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை துவக்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்த கஷ்டமானதாக இருந்தது எனினும் படப்பிடிப்பை பனிரெண்டு மணி நேரத்திற்குள் முடித்துவிட்டோம் என்றார் இயக்குனர் புதுகை மாரிசா. ராம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஆர்.ரமேஷ்கிருஷ்ணா இசையமைக்கிறார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்