March 31, 2023 8:01 am

நாசர் நடிகர் சங்கத்தில் புகார் மனு ராதாரவி, கே.என். காளை மீது நாசர் நடிகர் சங்கத்தில் புகார் மனு ராதாரவி, கே.என். காளை மீது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

விஷால், நாசர் உள்ளிட்ட சில நடிகர்களை இழிவாக பேசியதாக நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதா ரவி, துணைத்தலைவர் கே.என்.காளை ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் சமீபத்தில் திருச்சியில் நடந்த நாடக நடிகர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.

அப்போது விஷால், நாசரை விமர்சித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பேச்சு விவரங்கள் இன்டர் நெட்டிலும் பரவுகின்றன. இதனையடுத்து ராதாரவி, கே.என்.காளை மீது நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தப்பட்டது. ஐதராபாத்தில் சண்ட மாருதம் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் போனில் பேசி நடவடிக்கை எடுக்கும் படி கோரினர். அவர் நடிகர் சங்கத்தில் புகார் மனுவை அளிக்கும் படி கூறினார்.

ராதாரவி, கே.என். காளை மீது நாசர் தனியாக புகார் அளித்துள்ளார். கே.என்.காளை மீது நடவடிக்கை எடுக்கும் படி விஷால் தனியாக புகார் கொடுத்தார். சினிமா நடிகர்களுக்கும், நாடக நடிகர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவது போல் பேசியுள்ளனர். சினிமா நடிகர்களை தரக்குறைவாக விமர்சித்து உள்ளனர் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஐதராபாத்தில் சண்ட மாருதம் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய சரத்குமார் இருவரின் புகார் மனுக்களை ஆய்வு செய்தார். பின்னர் இந்த புகார்கள் மீது விளக்கம் அளிக்கும்படி ராதாரவி, கே.என்.காளை ஆகியோருக்கு இன்று நோட்டீசும் அனுப்பினார். வருகிற 30–ந்தேதி நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட இருக்கிறது. அன்றைய தினம் இருவரும் நேரில் ஆஜராகி புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்