‘தங்க மீன்கள்’ படத்தை ராம் இயக்கி கதாநாயகனாகவும் நடித்தார். தந்தைக்கும் மகளுக்குமான பாசப் போராட்டத்தை மையமாக வைத்து வந்தது. ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற இனிமையான பாடலும் இதில் இடம் பெற்றுள்ளது.
இந்த படம் தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது. ஏற்கெனவே சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்தது. சிறந்த பாடல் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. இந்திய பனோரமாவிலும் சிறந்த படமாக தேர்வானது. பிலிம் பேர் விருதுகளையும் பெற்றுள்ளது. ஐதராபாத்தில் நடந்த குழந்தைகள் திரைப்பட விழாவிலும் சிறந்த படமாக தேர்வானது.
தற்போது பாண்டிச்சேரி அரசும் சிறந்த படமாக தேர்வு செய்து விருது கொடுத்துள்ளது. புதுவை முதல் மந்திரி ரங்கசாமி இந்த விருதை வழங்கினார். தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமாரும் டைரக்டர் ராமும் நேரில் சென்று இந்த விருதை பெற்றுக் கொண்டனர். ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது