March 23, 2023 8:51 am

திரிஷாவுக்கும் தமிழ் பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு செய்தி – திரிஷா மறுப்பு திரிஷாவுக்கும் தமிழ் பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு செய்தி – திரிஷா மறுப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகை திரிஷா தனக்கு நிச்சயதார்த்தம் நடக்க வில்லை என்று மறுத்துள்ளார்.

‘லேசா லேசா’ சினிமாவில் அறிமுகமானவர் திரிஷா. கில்லி, சாமி, திருப்பாச்சி, கிரீடம், ஆறு, பீமா, விண்ணைத் தாண்டி வருவாயா, மங்காத்தா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தற்போது அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியுடன் நடித்த ‘பூலோகம்’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தனுசுடன் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக செய்திகள் வந்தன. இருவரும் பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றார்கள். வெளி நாடுகளுக்கும் ஒன்றாக சென்று வந்தார்கள். ஆனால் திடீரென்று இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

ராணாவுக்கு கன்னட நடிகையுடன் தொடர்பு இருந்ததால் திரிஷா சண்டை போட்டு விலகி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திரிஷாவுக்கும் தமிழ் பட தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் சென்னையில் நேற்று நிச்சயதார்த்தம் நடந்ததாக பரபரப்பு செய்தி வெளியானது.  வருண் மணியன் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தை தயாரித்து உள்ளார். இதில் துல்சர் சல்மான், நஸ்ரியா நடித்து இருந்தனர்.

தற்போது சித்தார்த் நடிக்கும் ‘காவியத் தலைவன்’ படத்தை தயாரித்து வருகிறார். கட்டுமான தொழிலும் செய்து வருகிறார். இருவரும் ஏற்கனவே நட்பாக பழகி வந்தனர். விருந்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்கள். தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக வெளியான செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை திரிஷா மறுத்தார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்