March 20, 2023 10:45 pm

சரத்குமாரின் பேச்சு குறித்து விஷால் பதில் அறிக்கைசரத்குமாரின் பேச்சு குறித்து விஷால் பதில் அறிக்கை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக உள்ள நடிகர் சரத்குமார் நேற்று திருச்சியில் பேசியபோது, நடிகர் சங்கத்திற்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் விஷால் தொடர்ந்து பேசினால் அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

சரத்குமாரின் பேச்சு குறித்து விஷால் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

சரத்குமாரின் பேச்சு என்னை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒரு நடிகராக, நடிகர் சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் நான் மதிக்கிறேன். என்னை நீக்குவதாக நடிகர் சங்கம் முடிவெடுத்தால் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

நடிகர் சங்க விதி 13-ன் படி நடிகர் சங்க உறுப்பினர் எவராவது, நடிகர் சங்கத்தின் மற்றொரு உறுப்பினரை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கிப்பேசினால் அவர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆகிறார்கள். இம்மாதிரி பேசியதற்காக தான் நடிகர் குமரிமுத்து சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். அதே போல் என்னை தரக்குறைவாக பேசியவர்களுக்கும் இம்மாதிரியான தண்டனை வழங்கப்படவேண்டும் என்று விஷால் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்